ஹிஸ்புல்லா இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து 200க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியுள்ளது.
லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேல் மீது தொடர்ச்சியான ராக்கெட் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல், ஹிஸ்புல்லா தலைவர்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்துகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதி முதல், ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் ஏவுகணை, ராக்கெட் மற்றும் டிரோன் தாக்குதல்களை செய்கிறார்கள். இவையால், லெபனானில் நேற்று இஸ்ரேல் அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியதில், 492 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், ஹிஸ்புல்லா மீண்டும் இஸ்ரேலின் ரமத் டேவிட் விமானப்படைத்தளம், நாசரேத், மஹிடோ மற்றும் ஹைபா போன்ற நகரங்களை குறிவைத்து 200க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியுள்ளது. ஆனால், இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பு இந்த ராக்கெட்டுகளை நடுவானில் தடுத்து நிறுத்தி அழித்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் யாருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை.