ஹிஸ்புல்லாவின் சுரங்கத்திற்குள் இஸ்ரேல் படைகள் தரைவழி தாக்குதல்

October 1, 2024

லெபனான் மீது தரைவழித்தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தொடர்ச்சியாக ராக்கெட் தாக்குதல்களை மேற்கொண்டனர். அதையடுத்து இஸ்ரேல் 23-ந்தேதி லெபனானில் வான்வழி தாக்குதலை தொடங்கியது. தலைநகர் பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனன் பகுதிகளை இலக்காகக் கொண்டு, இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தது. இதில் ஹிஸ்புல்லா முக்கிய தளபதிகள் உட்பட பலர் உயிரிழந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை, பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனை […]

லெபனான் மீது தரைவழித்தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தொடர்ச்சியாக ராக்கெட் தாக்குதல்களை மேற்கொண்டனர். அதையடுத்து இஸ்ரேல் 23-ந்தேதி லெபனானில் வான்வழி தாக்குதலை தொடங்கியது. தலைநகர் பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனன் பகுதிகளை இலக்காகக் கொண்டு, இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தது. இதில் ஹிஸ்புல்லா முக்கிய தளபதிகள் உட்பட பலர் உயிரிழந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை, பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனை ஹிஸ்புல்லா உறுதிசெய்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகு, இருதரப்பும் பரஸ்பர தாக்குதல்களை அதிகரித்துள்ளன. தற்போது, லெபனான் மீது தரைவழித்தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. ஹிஸ்புல்லாவின் உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு, அவர்கள் சுரங்கத்திற்குள் நுழைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் ராணுவம், தங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள இடங்களை இலக்காகக் கொண்டு செயல்படுவதாக கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu