ஹமாசிடமிருந்து பணய கைதிகள் 6 பேர் பிணமாக மீட்பு

September 2, 2024

ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்ட பணய கைதிகளில் 6 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து 251 பேரை காசாமுனைக்கு கடத்தியது ஹமாஸ். இதற்குப் பிறகு, இஸ்ரேல் போருக்குச் சென்று, ஒப்பந்த அடிப்படையில் 105 கைதிகளை மீட்டது. அதிரடி மீட்பு நடவடிக்கையின் மூலம் மேலும் சிலரை மீட்டது. ஆனால், 108 பேர் இன்னும் ஹமாஸ் பிடியில் உள்ளனர். இதில் சிலர் உயிரிழந்திருக்கும் என இஸ்ரேல் கூறியுள்ளது. காசாவில், ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் அமைக்கப்பட்ட சுரங்கத்தில் இஸ்ரேல் படையினர் இன்று தேடுதல் […]

ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்ட பணய கைதிகளில் 6 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

இஸ்ரேலில் இருந்து 251 பேரை காசாமுனைக்கு கடத்தியது ஹமாஸ். இதற்குப் பிறகு, இஸ்ரேல் போருக்குச் சென்று, ஒப்பந்த அடிப்படையில் 105 கைதிகளை மீட்டது. அதிரடி மீட்பு நடவடிக்கையின் மூலம் மேலும் சிலரை மீட்டது. ஆனால், 108 பேர் இன்னும் ஹமாஸ் பிடியில் உள்ளனர். இதில் சிலர் உயிரிழந்திருக்கும் என இஸ்ரேல் கூறியுள்ளது.

காசாவில், ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் அமைக்கப்பட்ட சுரங்கத்தில் இஸ்ரேல் படையினர் இன்று தேடுதல் நடத்தினர். அப்போது அக்டோபர் 7ஆம் தேதி கடத்தப்பட்ட 6 பணய கைதிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இஸ்ரேல் ராணுவம், சுரங்கப்பகுதியில் சோதனை நடத்துவதற்கு முன்னர், இந்த பணய கைதிகளை கொன்றதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்டவர்களில் 2 பெண்கள் அடங்குவர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu