காசாவிற்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் முடிவு

October 16, 2023

அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்குப்பிறகு காசாவிற்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே ராக்கெட் தாக்குதல் தீவிரமாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெறும் போரால் காசா பகுதியில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடு உடைமைகளை விட்டு வெளியேறி வருகின்றனர். மின்சாரம், எரிபொருள், குடிநீர், உணவு பொருட்கள் போன்ற அடிப்படைத் தேவைகள் நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் தவித்து வந்தனர். மருத்துவமனைகளில் நோயாளிகள் அடிப்படை வசதி […]

அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்குப்பிறகு காசாவிற்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையே ராக்கெட் தாக்குதல் தீவிரமாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெறும் போரால் காசா பகுதியில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடு உடைமைகளை விட்டு வெளியேறி வருகின்றனர். மின்சாரம், எரிபொருள், குடிநீர், உணவு பொருட்கள் போன்ற அடிப்படைத் தேவைகள் நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் தவித்து வந்தனர். மருத்துவமனைகளில் நோயாளிகள் அடிப்படை வசதி இன்றி தவித்து வந்தனர். இந்நிலையில், தெற்கு காசா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. அமெரிக்கா இஸ்ரேல் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பிரதமர் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

காசா போரில் முதல் வார இறுதியில் சுமார் பத்து லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர் என ஐநா சபை தகவல் அளித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu