ஈரான் எங்களை தாக்கினால், நாங்களும் தாக்குவோம். பிராந்திய பிரச்சினைகளின் பின்னால் ஈரான் உள்ளதை மறக்க முடியாது” இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு என்றார்.
ஐ.நா. சபையின் 79-வது கூட்டத்தில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து தலைவர்கள் பேசியுள்ளனர். இஸ்ரேலுக்கு போரை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. காசாவில் உடனடியாக 21 நாள் போர்நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும், மேலும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிற கூட்டணி நாடுகள் கடந்த நேற்று முன்தினம் அறிவித்துள்ளன.
இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் கூறியது, “இந்த வருடம் இங்கு வரவேண்டும் என நினைத்துக்கொள்ளவில்லை; என் நாடு உயிருக்குப் போராடுகிறது. பல தலைவர்கள் சொன்ன பொய்களைக் கேட்ட பிறகு, அதை மறுக்க இங்கு வந்தேன். இஸ்ரேல் அமைதியை விரும்புகிறது, ஆனால் ஈரான் எங்களை தாக்கினால், நாங்களும் தாக்குவோம். பிராந்திய பிரச்சினைகளின் பின்னால் ஈரான் உள்ளதை மறக்க முடியாது” என்றார்.