காசாவில் பள்ளி மீது தாக்குதல் - 15 பேர் பலி

August 2, 2024

காசாவில் உள்ள பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 15 பேர் பலியாகினர். காசாவில் இஸ்ரேல் நடத்திய போரில் இதுவரை 39 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் பலியாகினர். இந்நிலையில் காசாவில் உள்ள சுஜயா என்ற இடத்தில் செயல்பட்டு வந்த பள்ளி மீது இஸ்ரேல் படை நேற்று தாக்குதல் நடத்தியதில் அந்த பள்ளியில் தஞ்சம் புகுந்திருந்த பாலஸ்தீனர்கள் 15 பேர் பலியானார்கள். 29 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தப் பள்ளியில் ஹமாஸ் அமைப்பினர் தங்கி இருந்ததால் அவர்கள் […]

காசாவில் உள்ள பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 15 பேர் பலியாகினர்.

காசாவில் இஸ்ரேல் நடத்திய போரில் இதுவரை 39 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் பலியாகினர். இந்நிலையில் காசாவில் உள்ள சுஜயா என்ற இடத்தில் செயல்பட்டு வந்த பள்ளி மீது இஸ்ரேல் படை நேற்று தாக்குதல் நடத்தியதில் அந்த பள்ளியில் தஞ்சம் புகுந்திருந்த பாலஸ்தீனர்கள் 15 பேர் பலியானார்கள். 29 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்தப் பள்ளியில் ஹமாஸ் அமைப்பினர் தங்கி இருந்ததால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பள்ளி ஹமாஸ் அமைப்பின் பதுங்கு குழியாக செயல்பட்டதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. மருத்துவமனை மற்றும் பள்ளிகள் போன்ற இடங்களை ராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தவில்லை என்று ஹமாஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu