கான் யூனிஸ் நகரிலிருந்து இஸ்ரேல் படை வெளியேறியது

April 9, 2024

யூனிஸ்கான் நகர் மீது தாக்குதல் நடத்தியதற்கான நோக்கம் முடிவடைந்தது எனவும் அங்கிருந்து வெளியேறுகிறோம் என்றும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் பாலஸ்தீன மக்கள் அதிகம் வசித்து வந்த கான் யுனிஸ் நகர் மீது இஸ்ரேல் படை தாக்குதல் நடத்த தொடங்கியது. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது. இருந்தபோதிலும், இஸ்ரேல் படை தொடர்ந்து தீவிர தாக்குதலில் இறங்கியது. கடந்த நான்கு மாதமாக இந்த தாக்குதல் நடைபெற்று வந்தது. இந்த நகர் மீது வான்வழி தாக்குதல் […]

யூனிஸ்கான் நகர் மீது தாக்குதல் நடத்தியதற்கான நோக்கம் முடிவடைந்தது எனவும் அங்கிருந்து வெளியேறுகிறோம் என்றும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் பாலஸ்தீன மக்கள் அதிகம் வசித்து வந்த கான் யுனிஸ் நகர் மீது இஸ்ரேல் படை தாக்குதல் நடத்த தொடங்கியது. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது. இருந்தபோதிலும், இஸ்ரேல் படை தொடர்ந்து தீவிர தாக்குதலில் இறங்கியது. கடந்த நான்கு மாதமாக இந்த தாக்குதல் நடைபெற்று வந்தது. இந்த நகர் மீது வான்வழி தாக்குதல் மற்றும் தரைவழியில் சோதனையும் நடத்தி ஹமாஸ் அமைப்பினரை தேடி வந்தனர். அவர்களுடைய சுரங்கப்பாதைகளை கண்டுபிடித்து அழித்தனர். இந்த இடம் ஹமாஸ் அமைப்பின் ஆதிக்கம் உள்ள இடமாக கருதப்படுகிறது. எனவே இங்குள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் ராணுவ தாக்குதல் காரணமாக தரைமட்டமாகின.

இந்நிலையில், யூனிஸ்கான் நகர் மீது தாக்குதல் நடத்தியதற்கான நோக்கம் முடிவடைந்தது எனவும் அங்கிருந்து வெளியேறுகிறோம் என்றும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதனால் அந்நகரில் வசித்து வந்த மக்கள் தங்களுடைய ஊருக்கு திரும்பி இருக்கின்றனர். ஆனால் அந்த நகரம் தன்னுடைய அடையாளத்தை இழந்துள்ளது. கட்டிடங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. அடையாளம் தெரியாத வகையில் அந்த நகரம் சிதைந்து போய் உள்ளதாக அந்த ஊர் மக்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu