லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் இடங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார்.
ஹமாசுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா தினமும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதால், இஸ்ரேலும் லெபனானில் பல்வேறு தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்நிலையில், லெபனானில் ஏற்பட்ட பேஜர் வெடிப்பு சம்பவம் பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. இது இஸ்ரேலின் செயல் எனக் கருதப்படுகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில், ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நசரல்லா அறிவித்ததன்படி, வடக்கு இஸ்ரேலின் ராணுவ நிலைகளில் 140 ராக்கெட்கள் ஏவி தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல் பலவற்றை வானில் அழித்து விட்டதாக தெரிவித்தது. அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பெய்ரூட்டின் தெற்கு பகுதியில், ஹிஸ்புல்லா படையின் ராட்வான் பிரிவின் தளபதி உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.