இஸ்ரேல் அமைச்சர் பென்னி கான்ட்ஸ் நேற்று அமெரிக்க பயணம் மேற்கொண்டார்.
இஸ்ரேல் அரசின் விதிமுறைப்படி வெளிநாடு செல்ல அந்நாட்டு அமைச்சர்கள் பிரதமரிடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும். ஆனால் பிரதமர் நேத்தன்யாகுவின் அனுமதி இல்லாமல் பென்னி அமெரிக்கா சென்று உள்ளார். அவர் அங்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சல்லிவன் போன்றோரை சந்திக்க உள்ளார். அவர் பிரதமரின் அனுமதி இல்லாமல் சென்றது அந்நாட்டு போர் சூழலுக்காக அமைக்கப்பட்ட அவசர கால அமைச்சரவையில் பிளவு ஏற்பட்டு இருக்கிறதோ என்ற சந்தேகத்தை பரவலாக ஏற்படுத்தியுள்ளது. பென்னி கான்ட்ஸ் தேசிய ஒற்றுமை கட்சி தலைவர் ஆவார். மிதவாதியான இவர் காசா போர் தொடங்கியபின் கூட்டணி அரசியல் சேர்ந்தார். இவர் போரை கையாள உருவாக்கப்பட்ட குழுவில் அமைச்சராக இடம் பெற்றார்.
அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்தவும், ஹமாசிடம் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கவும் அமெரிக்கா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இவருடைய அமெரிக்க பயணத்திற்கு பிரதமர் நேதன்யாகு சம்மதம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.