அல் ஷிஃபா மருத்துவமனையை விட்டு வெளியேறிய இஸ்ரேல் படையினர்

April 2, 2024

காசாவில் உள்ள அல் ஷிஃபா மருத்துவமனையை விட்டு இஸ்ரேல் ராணுவத்தினர் நேற்று வெளியேறினர். கடந்த 2 வாரங்களாக அல் ஷிஃபா மருத்துவமனையில் இஸ்ரேல் படையினர் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நடவடிக்கை வெற்றி அடைந்ததாக அறிவிக்கப்பட்டு நேற்று இஸ்ரேல் படையினர் வெளியேறி உள்ளனர். அதே சமயத்தில், மருத்துவமனையில் இருந்த பொதுமக்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் எண்ணற்றோரை இஸ்ரேல் ராணுவத்தினர் படுகொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்துடன், அல் ஷிஃபா மருத்துவமனை முழுவதுமாக உருக்குலைக்க பட்டு, பயன்பாட்டுக்கு தகாததாக […]

காசாவில் உள்ள அல் ஷிஃபா மருத்துவமனையை விட்டு இஸ்ரேல் ராணுவத்தினர் நேற்று வெளியேறினர்.

கடந்த 2 வாரங்களாக அல் ஷிஃபா மருத்துவமனையில் இஸ்ரேல் படையினர் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நடவடிக்கை வெற்றி அடைந்ததாக அறிவிக்கப்பட்டு நேற்று இஸ்ரேல் படையினர் வெளியேறி உள்ளனர். அதே சமயத்தில், மருத்துவமனையில் இருந்த பொதுமக்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் எண்ணற்றோரை இஸ்ரேல் ராணுவத்தினர் படுகொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்துடன், அல் ஷிஃபா மருத்துவமனை முழுவதுமாக உருக்குலைக்க பட்டு, பயன்பாட்டுக்கு தகாததாக மாறி உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், காசாவில் இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கடந்த 178 நாட்களாக நடந்து வரும் போரில், இதுவரை 32845 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu