இஸ்ரேலில் அல்ஜசீரா அலுவலகங்களில் சோதனை

May 10, 2024

இஸ்ரேலில் உள்ள அல்ஜசீரா அலுவலகங்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தியுள்ளனர் அல்ஜசீரா செய்தி நிறுவனம் கத்தாரை மையமாக கொண்டுள்ளது. இது உலகெங்கிலும் அலுவலகங்களை அமைத்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறிது நாட்களுக்கு முன் இஸ்ரேலில் உள்ள அந்த செய்தி நிறுவனத்தின் அலுவலகங்களை மூடுவதற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் நேற்று நசரேத் நகரில் உள்ள இந்த செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் இஸ்ரேல் போலீசார் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான கருவிகளை […]

இஸ்ரேலில் உள்ள அல்ஜசீரா அலுவலகங்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்

அல்ஜசீரா செய்தி நிறுவனம் கத்தாரை மையமாக கொண்டுள்ளது. இது உலகெங்கிலும் அலுவலகங்களை அமைத்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறிது நாட்களுக்கு முன் இஸ்ரேலில் உள்ள அந்த செய்தி நிறுவனத்தின் அலுவலகங்களை மூடுவதற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் நேற்று நசரேத் நகரில் உள்ள இந்த செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் இஸ்ரேல் போலீசார் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான கருவிகளை பறிமுதல் செய்தனர். இந்த சேனலின் ஒளிபரப்பையும் அரசு முடக்கியுள்ளது. அதேபோல் கிழக்கு ஜெருசலேமில் உள்ள அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

காசா போர் குறித்து தகவல்கள் பாரபட்சமாக ஒளிபரப்பப்படுவதாக இந்த செய்தி நிறுவனத்தின் மீது இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார். எனினும், இதனை இந்த செய்தி நிறுவனம் மறுத்துள்ளது. இந்த தடை சட்டத்திற்கு புறம்பானது என எனவும், மனித உரிமைகளை மீறும் செயல் எனவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவில் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு எதிராக தன்னால் இயன்ற நடவடிக்கையை எடுக்கப் போவதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu