ரபா அகதிகள் முகாம் மீது தாக்குதல் - 25 பேர் பலி

June 22, 2024

ரபா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதால் 25 பேர் பலியாகியுள்ளனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. போர் நிறுத்த பேச்சுவார்த்தை பலன் அளிக்கவில்லை. காசாவில் மொத்தம் 23 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். சமீப காலமாக ரஃபாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காசா போரில் இதுவரை 37 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வழியாகி உள்ளனர். இதில் பெரும்பாலானோர் […]

ரபா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதால் 25 பேர் பலியாகியுள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. போர் நிறுத்த பேச்சுவார்த்தை பலன் அளிக்கவில்லை. காசாவில் மொத்தம் 23 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். சமீப காலமாக ரஃபாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காசா போரில் இதுவரை 37 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வழியாகி உள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இந்நிலையில், ரஃபாவிற்கு வெளியே பாலஸ்தீனர்கள் தங்கி இருந்த அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 25 பேர் பலியாகினர். 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu