அல்ஷிபா மருத்துவமனையில் 90 ஹமாஸ் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

March 21, 2024

காசாவில் உள்ள அல்ஷிபா மருத்துவமனையில் 90 ஹமாஸ் அமைப்பினரை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. காசாவின் மிகப்பெரிய மருத்துவமனை அல்ஷிபா. இங்கு இஸ்ரேல் ராணுவப் படையினர் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது சுமார் 90 ஹமாஸ் அமைப்பினரை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று கூறியுள்ளது. இது குறித்து இராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அல்ஷிபா மருத்துவமனையில் திங்கட்கிழமை ராணுவம் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது. அதில் 90 ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதோடு 300-க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களை […]

காசாவில் உள்ள அல்ஷிபா மருத்துவமனையில் 90 ஹமாஸ் அமைப்பினரை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

காசாவின் மிகப்பெரிய மருத்துவமனை அல்ஷிபா. இங்கு இஸ்ரேல் ராணுவப் படையினர் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது சுமார் 90 ஹமாஸ் அமைப்பினரை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று கூறியுள்ளது. இது குறித்து இராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அல்ஷிபா மருத்துவமனையில் திங்கட்கிழமை ராணுவம் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது. அதில் 90 ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதோடு 300-க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களை பிடித்து விசாரித்து வருகிறோம். இது தவிர மருத்துவமனைக்குள் ஹமாஸ் அமைப்பினர் ஏராளமான ஆயுதங்களை ஒதுக்கி வைத்துள்ளனர். அவற்றை பறிமுதல் செய்துள்ளோம். இந்த நடவடிக்கையின்போது பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது மிகவும் கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஹமாஸ் அமைப்பினர் இதனை மறுக்கின்றனர். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நோயாளிகளும், மருத்துவமனையில் தஞ்சம் அடைந்த பொதுமக்களும் தான் உயிரிழந்தனர் என்று அவர்கள் கூறியுள்ளனர். முன்னதாக காசா போர் தொடங்கிய பின்பு அல்ஷிபா மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தியது. தற்போது அதே மருத்துவமனையை சுற்றிவளைத்து தாக்கியுள்ளது. மருத்துவமனையில் ஹமாஸ் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் அங்கு ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதாகவும் தங்களுக்கு உளவுத்துறை தகவல் தந்ததால் தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu