இஸ்ரேலில் மேற்கு நைல் வைரஸ் தாக்குதல் வேகமாகப் பரவி வருகிறது. ஏற்கனவே 710 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில், வைரஸ் பாதிப்பால் இருவர் உயிரிழந்து உள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலான பாதிப்பு, மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலில் கண்டறியப்பட்டுள்ளது.
கொசுக்களால் பரவும் இந்த வைரஸ் காய்ச்சல், தலைவலி மற்றும் தீவிர மூளை பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள, பொது மக்கள் பூச்சி மருந்துகளை பயன்படுத்துவதும், தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றுவதும் அவசியம் என அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.