குறைந்த எடையுள்ள ராக்கெட் எஞ்சின் பாகத்தை தயாரித்து இஸ்ரோ சாதனை

குறைந்த எடையுள்ள ராக்கெட் என்ஜின் முனையை உருவாக்கி இஸ்ரோ புதிய சாதனை படைத்துள்ளது. இது ராக்கெட் தொழில்நுட்பத்தில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளதாக கூறியுள்ளது. குறைந்த எடை உள்ள கார்பன் முனையை ராக்கெட் என்ஜினில் பொருத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் மேற்கொண்ட இந்த ஆய்வு, ராக்கெட்டில் கூடுதல் எடைகளை சேர்ப்பதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. கார்பன் - கார்பன் என்று அழைக்கப்படும் நவீன பொருளை கொண்டு ராக்கெட் எஞ்சின் முனை பாகம் […]

குறைந்த எடையுள்ள ராக்கெட் என்ஜின் முனையை உருவாக்கி இஸ்ரோ புதிய சாதனை படைத்துள்ளது. இது ராக்கெட் தொழில்நுட்பத்தில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளதாக கூறியுள்ளது.

குறைந்த எடை உள்ள கார்பன் முனையை ராக்கெட் என்ஜினில் பொருத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் மேற்கொண்ட இந்த ஆய்வு, ராக்கெட்டில் கூடுதல் எடைகளை சேர்ப்பதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. கார்பன் - கார்பன் என்று அழைக்கப்படும் நவீன பொருளை கொண்டு ராக்கெட் எஞ்சின் முனை பாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, அனைத்துவித அசாதாரண சூழல்களையும் தாங்கும் திறன் கொண்டது. இதனை ராக்கெட்டில் பொருத்துவதால், 67% நிரையை குறைக்க முடியும். அதாவது pslv ராக்கெட்டில் கூடுதலாக 15 கிலோ எடையை சேர்க்க முடியும். எனவே, எதிர்கால ராக்கெட் திட்டங்கள் அதிக வெற்றிகளை தரும் என நம்பப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu