இஸ்ரோ சார்பில் நாளை பிஎஸ்எல்வி சி54 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட உள்ளது. இந்நிலையில், இதற்கான கவுண்டவுன் இன்று காலை 10.26 மணியளவில் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
நாளை, பிஎஸ்எல்வி சி54 ராக்கெட் மூலம், ஓசன்சாட் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. நாளை காலை 11:56 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்பட தயாராக உள்ளது. இந்த ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டது. மேலும், 321 டன் எடையைத் தாங்க வல்லது. நாளை ஏவப்பட உள்ள ராக்கெட், ‘பிஎஸ்எல்வி எக்ஸெல்’ (PSLV XL) ரக ராக்கெட் ஆகும். இது இந்த ராக்கெட்டின் 24 வது பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.