சந்திரயான் 3 - லேண்டர் மற்றும் ரோவரை விழிக்கச் செய்யும் பணிகள் தொடங்கியது - இஸ்ரோ

September 21, 2023

நிலவின் தென் துருவ பகுதியில் இரவு நேரம் தொடங்கியதால், விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் உறக்க நிலைக்கு அனுப்பப்பட்டன. தற்போது, தென் துருவப் பகுதியில் மீண்டும் சூரிய உதயம் ஏற்படவுள்ளது. அதனை முன்னிட்டு, லேண்டர் மற்றும் ரோவரை விழிக்கச் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நிலவில் சூரிய ஒளி இல்லாத நாட்களில் மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் வரை கடுமையான குளிர் நிலவும். உறைபணி தட்பவெட்ப நிலையில் லேண்டர் மற்றும் ரோவர் பாகங்கள் சரியாக பணி செய்யாது. […]

நிலவின் தென் துருவ பகுதியில் இரவு நேரம் தொடங்கியதால், விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் உறக்க நிலைக்கு அனுப்பப்பட்டன. தற்போது, தென் துருவப் பகுதியில் மீண்டும் சூரிய உதயம் ஏற்படவுள்ளது. அதனை முன்னிட்டு, லேண்டர் மற்றும் ரோவரை விழிக்கச் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நிலவில் சூரிய ஒளி இல்லாத நாட்களில் மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் வரை கடுமையான குளிர் நிலவும். உறைபணி தட்பவெட்ப நிலையில் லேண்டர் மற்றும் ரோவர் பாகங்கள் சரியாக பணி செய்யாது. எனவே, அவை உறக்க நிலைக்கு அனுப்பப்பட்டன. இந்த நிலையில், நாளை முதல் அங்கு சூரிய வெளிச்சம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, கருவிகளை விழிக்கச் செய்யும் நடவடிக்கையில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. கருவிகளில் உள்ள சூரிய மின் தகடுகள் மூலம் அவற்றுக்கான செயல் திறன் கிடைக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், கருவிகள் மீண்டும் விழித்து எழுந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் பட்சத்தில், பற்பல கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu