ஆர்எச் 200 சவுண்டிங் ராக்கெட், தொடர்ச்சியாக 200 முறை வெற்றிகரமாக ஏவப்பட்டு உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்த ராக்கெட்டின் 200வது வெற்றிப் பயணம் திருவனந்தபுரம் தும்பா ராக்கெட் ஏவுதளத்தில் நேற்று நிகழ்ந்தது. நண்பகல் 11.55 மணிக்கு ராக்கெட் ஏவப்பட்டது. இந்த வரலாற்று நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்து மற்றும் இஸ்ரோ தலைவர் சோமநாத் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன. விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்காக சவுண்டிங் ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆர் எச் 200 ராக்கெட் மூலம் பல்வேறு விஞ்ஞான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, 2010 சூரிய கிரகணம், MIDAS, MONEX, IMAP, LMS, EEJ ஆய்வுகளில் இந்த ராக்கெட் பயன்படுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டுக்கு முன்னோடியாக ரோகிணி சவுண்டிங் ராக்கெட் இருந்ததாக நிகழ்வில் கூறப்பட்டது.