விண்வெளியில் புதிய சாதனை படைத்த இஸ்ரோ

January 6, 2024

இஸ்ரோ நிறுவனம் எக்சோபோட்ஸ் என்னும் வானிலை நிகழ்வுகளை ஆய்வு செய்யும் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த ஜனவரி 1ஆம் தேதி பூமியில் சுமார் 650 km உயரம் கொண்ட எக்சோபோட்ஸ் எனப்படும் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இது கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்கள் போன்ற வானியல் நிகழ்வுகளை ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதன் மூலம் கருந்துளை, நியூட்ரான் விண்மீன்களில் இருந்து வெளியாகும் கதிரியக்கம் விண்மீன் வெடிப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஐந்து […]

இஸ்ரோ நிறுவனம் எக்சோபோட்ஸ் என்னும் வானிலை நிகழ்வுகளை ஆய்வு செய்யும் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த ஜனவரி 1ஆம் தேதி பூமியில் சுமார் 650 km உயரம் கொண்ட எக்சோபோட்ஸ் எனப்படும் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இது கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்கள் போன்ற வானியல் நிகழ்வுகளை ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதன் மூலம் கருந்துளை, நியூட்ரான் விண்மீன்களில் இருந்து வெளியாகும் கதிரியக்கம் விண்மீன் வெடிப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஐந்து ஆண்டுகளுக்கு ஆய்வு செய்யப்பட உள்ளது. இது தவிர பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இறுதி பகுதியான பிஎஸ்4 இயந்திரத்தில் போயம் எனும் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த இயந்திரத்தில் இருந்து எஃப் சி பி எஸ் என்னும் கருவி மூலம் மின்சார தயாரிப்பு சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் வாயுவைக் கொண்டு பியூல் செல் கருவி மூலம் 180 வாட்ஸ் அளவுக்கு மின் ஆற்றல் உற்பத்தி செய்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த மின்னாற்றல் உற்பத்தியில் விண்ணில் மாசு ஏதும் ஏற்படாது. எதிர்காலத்தில் சூரிய ஒளி இன்றி விண்வெளியில் மின்னாற்றல் தேவையை பெற முடியும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக விண்வெளியில் அமெரிக்கா, ஐரோப்பிய உள்ளிட்ட நாடுகள் மின்சாரம் உற்பத்தி செய்து உள்ளன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் புதிய சாதனை படைத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu