இஸ்ரோ ஆராய்ச்சி நிலையம் ஆதித்யா எல் -1 விண்கலத்தை சூரியனின் ஆராய்ச்சிக்காக விண்ணில் ஏவ உள்ளது.
இஸ்ரோ நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்ததற்காக சந்திராயன்-3 விண்கலத்தை ஜூலை 14ஆம் தேதி அனுப்பியது. இது வெற்றிகரமாக நிலவில் மேற்பரப்பில் தரை இறங்கியது. இனத அடுத்து 14 நாட்களுக்கான ஆய்வுப் பணியை இஸ்ரோ ரோவருக்கு வழங்கியுள்ளது. இதன்படி ரோவர் நிலவில் மண்ணில் நகர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
இந்த நிலையில் ஆதித்யா விண்கலத்தை செப்டம்பர் முதல் வாரத்தில் சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக விண்ணில் செலுத்த இருப்பதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. தற்போது செப்டம்பர் 2 ஆம் தேதி ஆதித்யா எல் -1 வின்கலம் விண்ணில் பாய உள்ளது. இது பிஎஸ்எல்வி- சி57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.