ஓஷன்சாட் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன - இஸ்ரோ

November 26, 2022

இன்று இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஓஷன்சாட் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. பிஎஸ்எல்வி சி54 ராக்கெட்டுக்கான கவுண்டவுன் நேற்று தொடங்கப்பட்டது. இன்று காலை 11.56 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ராக்கெட் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டின் முதன்மை எடையாக ஓஷன்சாட் இருந்தது. இது முதலாவது சுற்றுவட்ட பாதையில் ராக்கெட்டில் இருந்து பிரிந்தது. அதைத்தொடர்ந்து இரண்டாவது சுற்றுவட்ட பாதையில் மற்ற செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றாக பிரிந்தன. அந்த 8 நானோ செயற்கை […]

இன்று இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஓஷன்சாட் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

பிஎஸ்எல்வி சி54 ராக்கெட்டுக்கான கவுண்டவுன் நேற்று தொடங்கப்பட்டது. இன்று காலை 11.56 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ராக்கெட் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டின் முதன்மை எடையாக ஓஷன்சாட் இருந்தது. இது முதலாவது சுற்றுவட்ட பாதையில் ராக்கெட்டில் இருந்து பிரிந்தது. அதைத்தொடர்ந்து இரண்டாவது சுற்றுவட்ட பாதையில் மற்ற செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றாக பிரிந்தன. அந்த 8 நானோ செயற்கை கோள்களும் வெவ்வேறு சுற்றுவட்ட பாதையில் நிறுவப்பட்டன.

“முதலாவதாக, ராக்கெட் ஏவப்பட்ட 20 நிமிடங்களில், புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் 742 கிலோ மீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டது. அதன் பின்னர், 516 கிலோமீட்டர் உயரத்தில் முதல் நானோ செயற்கைக்கோளும், 528 கிலோமீட்டர் உயரத்தில் கடைசி நானோ செயற்கைக்கோளும் ஒவ்வொன்றாக நிறுவப்பட்டன” என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu