இஸ்ரோ, 2வது முறையாக காற்று உந்துசக்தி ராக்கெட் பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் பரிசோதனை மையத்தில் நேற்று காலை 7 மணி அளவில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. RH-560 சவுண்டிங் ராக்கெட் மூலம் மேற்கொள்ளப்பட் இந்த பரிசோதனை முழுமையாக வெற்றியடைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. காற்றை மட்டுமே மூலமாக கொண்டு ராக்கெட் ஏவும் தொழில்நுட்பம் செலவு குறைந்ததாக கருதப்படுகிறது. எனவே, இஸ்ரோ இந்த சோதனையில் தீவிரமாக களம் இறங்கியுள்ளது. மேலும், காற்று மட்டுமே தேவைப்படுவதால், உந்து சக்தி அமைப்புகளின் எடை பெருமளவு குறையும். ராக்கெட்டின் கொள்ளளவு அதிகரிக்கும். இதனால், எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு அதிக பயன் கிடைக்கும்.