இஸ்ரோ-வின் புதிய பூமி கண்காணிப்பு செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவபட்டது.
இஸ்ரோ-வின் புதிய பூமி கண்காணிப்பு செயற்கைகோள் இ.ஓ.எஸ்.08, எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட்டில் சதீஷ் தவான் மையத்தில் இருந்து வெற்றிகரமாக வெளியிடப்பட்டது. 175 கிலோ எடையுடைய 3 ஆராய்ச்சி கருவிகள் உடைய இந்த ராக்கெட், திட்டமிட்டதுபோல சென்று, பூமியிலிருந்து 475 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி வட்ட சுற்றுப்பாதையில் செயற்கைகோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. இது, சுற்றுச்சூழல் மற்றும் பேரிடர் கண்காணிப்புக்கு உதவும்.