பிரக்யான் ரோவரின் வீடியோ - இஸ்ரோ பகிர்வு

சந்திரயான் 3 திட்டத்தில், நிலவுக்கு அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர், நிலவில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், விக்ரம் லேண்டர் எடுத்த பிரக்யான் ரோவரின் வீடியோ ஒன்றை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது. பிரக்யான் ரோவர் நிலவில் காணப்படும் மேடு பள்ளங்களை கணித்து, அதற்கேற்றவாறு பயணம் செய்யும் திறன் கொண்டதாகும். அதன்படி, தனது பயணத்திற்கான பாதுகாப்பான பாதையை கண்டறிந்து சுற்றிவரும் பிரக்யான் ரோவரின் காணொளி கவனம் பெற்றுள்ளது. விக்ரம் லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன […]

சந்திரயான் 3 திட்டத்தில், நிலவுக்கு அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர், நிலவில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், விக்ரம் லேண்டர் எடுத்த பிரக்யான் ரோவரின் வீடியோ ஒன்றை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது.

பிரக்யான் ரோவர் நிலவில் காணப்படும் மேடு பள்ளங்களை கணித்து, அதற்கேற்றவாறு பயணம் செய்யும் திறன் கொண்டதாகும். அதன்படி, தனது பயணத்திற்கான பாதுகாப்பான பாதையை கண்டறிந்து சுற்றிவரும் பிரக்யான் ரோவரின் காணொளி கவனம் பெற்றுள்ளது. விக்ரம் லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன லேண்டர் இமேஜர் கேமரா இந்த வீடியோவை எடுத்துள்ளது. இதனை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள இஸ்ரோ, சுவாரசியமான விளக்கம் ஒன்றை பதிவிட்டுள்ளது. “விளையாடும் குழந்தையை தாய் அன்பாக கண்காணிப்பது போல, பிரக்யான் ரோவரை விக்ரம் லேண்டர் கண்காணித்து வருவதாக” கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu