அடுத்த நிலவு திட்டத்தில் ஜப்பானுடன் இணையும் இஸ்ரோ

சந்திரயான் 3 திட்டத்தை தொடர்ந்து, இஸ்ரோவின் அடுத்த கட்ட நிலவு திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. இதில், இஸ்ரோவுடன் இணைந்து ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி மையமான ஜாக்ஸா (JAXA) இணைய உள்ளது. இஸ்ரோ மற்றும் ஜாக்ஸா இணைந்து பணியாற்றும் திட்டத்திற்கு, லூனார் போலார் எக்ஸ்ப்ளோரேஷன் மிஷன் (LUPEX), அதாவது நிலவின் துருவப் பகுதி ஆராய்ச்சி திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு தேவைப்படும் ரோவர் மற்றும் லேண்டர் கருவிகளை இஸ்ரோ மற்றும் ஜாக்ஸா மையங்கள் வடிவமைத்து வருகின்றன. இந்தியா மற்றும் ஜப்பான் […]

சந்திரயான் 3 திட்டத்தை தொடர்ந்து, இஸ்ரோவின் அடுத்த கட்ட நிலவு திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. இதில், இஸ்ரோவுடன் இணைந்து ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி மையமான ஜாக்ஸா (JAXA) இணைய உள்ளது. இஸ்ரோ மற்றும் ஜாக்ஸா இணைந்து பணியாற்றும் திட்டத்திற்கு, லூனார் போலார் எக்ஸ்ப்ளோரேஷன் மிஷன் (LUPEX), அதாவது நிலவின் துருவப் பகுதி ஆராய்ச்சி திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு தேவைப்படும் ரோவர் மற்றும் லேண்டர் கருவிகளை இஸ்ரோ மற்றும் ஜாக்ஸா மையங்கள் வடிவமைத்து வருகின்றன.

இந்தியா மற்றும் ஜப்பான் விண்வெளி நிலையங்கள் இணைந்து பணியாற்றும் லூபெக்ஸ் திட்டத்தில், நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி மையங்களும் பங்கேற்க உள்ளன. அதன்படி, இந்த திட்டத்திற்கான ரோவரில், நாசா மற்றும் இ எஸ் ஏ வடிவமைத்த கருவிகளும் இடம்பெற உள்ளன. இந்த திட்டத்திற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. இதை முன்னிட்டு, ஜப்பான் விண்வெளி நிலைய அதிகாரிகள் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு வருகை தந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த திட்டம் 2025 ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu