தாமதமாகும் நிசார் திட்டம் - முக்கிய பாகத்தை நாசாவுக்கு அனுப்பிய இஸ்ரோ

நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து பணியாற்றும் நிசார் திட்டத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாத இறுதியில் இந்த திட்டத்திற்கான தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. நிசார் திட்டத்தில் ஏவப்படும் செயற்கைக்கோளில் 39 அடி விட்டம் கொண்ட ரேடார் ஆண்டனா ரெஃப்ளெக்டார் உள்ளது. இதற்கு சிறப்பு கோட்டிங் செய்யப்பட வேண்டும். இந்த பணிகளுக்கான இறுதி நிலையில் திட்டம் உள்ளது. ஆனால், இதற்கு நாசாவிடமிருந்து முக்கிய பங்களிப்பு தேவைப்படுவதாக இஸ்ரோ கூறியுள்ளது. சிறப்பு கோட்டிங் செய்யப்பட்ட பின்னர் […]

நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து பணியாற்றும் நிசார் திட்டத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாத இறுதியில் இந்த திட்டத்திற்கான தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

நிசார் திட்டத்தில் ஏவப்படும் செயற்கைக்கோளில் 39 அடி விட்டம் கொண்ட ரேடார் ஆண்டனா ரெஃப்ளெக்டார் உள்ளது. இதற்கு சிறப்பு கோட்டிங் செய்யப்பட வேண்டும். இந்த பணிகளுக்கான இறுதி நிலையில் திட்டம் உள்ளது. ஆனால், இதற்கு நாசாவிடமிருந்து முக்கிய பங்களிப்பு தேவைப்படுவதாக இஸ்ரோ கூறியுள்ளது. சிறப்பு கோட்டிங் செய்யப்பட்ட பின்னர் செயற்கைக்கோள் பாகம் அசாதாரண வெப்ப நிலைக்கு தகுந்ததாக மாறிவிடும். இதற்காக அந்த பாகம் நாசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், முழு பரிசோதனையும் வெற்றி அடைந்த பிறகு அந்த பாகம் மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறியுள்ளது. நிசார் திட்டத்தில் மனிதர்களின் புவி கண்காணிப்பு திறன் அடுத்த கட்டத்தை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu