காணாமல் போன நினைவு சின்னங்களை பட்டியலில் இருந்த அகற்ற முடிவு

March 26, 2024

இந்திய தொல்லியல் துறையால் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 18 நினைவு சின்னங்கள் முக்கியத்துவம் வாய்ந்த நினைவு சின்னங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளன. இந்திய தொல்லியல் துறை நம் நாட்டின் வரலாறு, கலாச்சாரம் ஆகியவற்றை உணர்த்தும் வகையில் நாடு முழுவதும் 3,693 நினைவு சின்னங்களை பராமரித்து வருகிறது. இந்த நினைவு சின்னங்கள் தொடர்பாக கடந்த 2013ல் நாடு முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் 92 நினைவு சின்னங்கள் காணவில்லை என பட்டியலிடப்பட்டதை தொடர்ந்து தீவிர கள ஆய்வுகள் […]

இந்திய தொல்லியல் துறையால் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 18 நினைவு சின்னங்கள் முக்கியத்துவம் வாய்ந்த நினைவு சின்னங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளன.

இந்திய தொல்லியல் துறை நம் நாட்டின் வரலாறு, கலாச்சாரம் ஆகியவற்றை உணர்த்தும் வகையில் நாடு முழுவதும் 3,693 நினைவு சின்னங்களை பராமரித்து வருகிறது. இந்த நினைவு சின்னங்கள் தொடர்பாக கடந்த 2013ல் நாடு முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் 92 நினைவு சின்னங்கள் காணவில்லை என பட்டியலிடப்பட்டதை தொடர்ந்து தீவிர கள ஆய்வுகள் நடத்தப்பட்டதில் 42 நினைவுச் சின்னங்கள் மீட்கப்பட்டன. அதே நேரத்தில் 50 நினைவு சின்னங்கள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவை நகரமயமாக்கல், அணைகள் கட்டுவது போன்றவற்றால் காணாமல் போனதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் காணாமல் போன 50 நினைவுச் சின்னங்களில் 24 நினைவு சின்னங்கள் கண்டுபிடிக்க முடியாதவை என்று பட்டியலிடப்பட்டுள்ளன. இதிலிருந்து தற்போது 18 சின்னங்களை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவு சின்னங்கள் பட்டியலில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தொல்லியல் துறையின் சட்டத்தின் படி அடுத்த வாரத்தில் இவை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளன. இவற்றில் 11 நினைவு சின்னங்கள் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவை. டில்லி மற்றும் ஹரியானாவில் தலா இரண்டு அடங்கள் இடம் பெற்றுள்ளன. அசாம், மேற்குவங்கம் அருணாச்சல பிரதேசத்தில் தலா ஒரு நினைவுச் சின்னமும் பட்டியலில் இருந்து அகற்றப்பட உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu