இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரில் ஸ்வரெவ் இறுதி சுற்றிற்கு முன்னேறியுள்ளார்.
ரோமில் களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரை இறுதி சுற்றில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் சிலி வீரர் அலேஜான்டிரா டபிலோ உடன் மோதினார். இதில் முதல் சுற்றை இழந்த ஸ்வரேவ் அடுத்த செட்டில் 1-6,7-6,6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்