இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் டீப் ஃபேக் புகைப்படங்களை வைத்து அவதூறு செய்திகள் இணையத்தில் பகிரப்பட்டன. இந்த நிலையில் இந்த படங்களை உருவாக்கியவர்கள் மீது மெலோனி வழக்கு தொடர்ந்திருந்தார். தற்போது 90 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு கோரியுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனின் டீப் ஃபேக் புகைப்படம் அமெரிக்காவின் பாலியல் இணையதளங்களில் வெளியானது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தவே, டீப் ஃபேக் புகைப்படத்தை உருவாக்கியவர்கள் மீது மெலோனி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கிடைக்கும் நீதி இதுபோன்ற டீப் ஃபேக் தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படும் பெண்களுக்கான நீதியை பெற்று தரும் என்று நம்புவதாக மெலோனியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இத்தாலி நாட்டு சட்ட திட்டத்தின் படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால், 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.