நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டர்ன் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நியூசிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜசிந்தா ஆர்டெர்ன். தாராளவாத தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஜெசிந்தா ஆர்டன் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருகிறார். சமீபத்தில் அங்கு நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியை விட பின் தங்கியது. தேர்தலில் ஜசிந்தா ஆர்டெர்னின் கட்சி பின்னடைவை சந்தித்துள்ள சூழலில், வரும் பிப்ரவரி 17 ஆம் தேதியுடன் தனது பதவியில் இருந்து விலகுவதாக ஜசிந்தா ஆர்டெர்ன் அறிவித்து இருக்கிறார்.
இது குறித்து ஜசிந்தா ஆர்டர்ன் கூறுகையில், "இது கடினமான பணி என்பதால் நான் விலகி செல்லவில்லை. நாட்டை வழிநடத்துவதற்கு சிறந்த நபர் இருப்பதை அறிந்ததால் நான் இந்த பொறுப்பில் இருந்து விலகுகிறேன்" என்றார்.