இணையவழி சூதாட்டத்தை விளம்பரப்படுத்துபவர்களுக்கு சிறை மற்றும் அபராதம்

இணையவழி சூதாட்டம் குறித்து விளம்பரப்படுத்துபவர்களுக்கு ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் இணையவழி சூதாட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு இணையவழி சூதாட்டம் தடை மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் 2022 இன் படி இணையவழி சூதாட்டம் மற்றும் இணைய வழி வாய்ப்பு விளையாட்டு பந்தயம் போன்றவற்றில் விளையாடுவதை தடை செய்துள்ளது. அவ்வாறு இணையவழி […]

இணையவழி சூதாட்டம் குறித்து விளம்பரப்படுத்துபவர்களுக்கு ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் இணையவழி சூதாட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு இணையவழி சூதாட்டம் தடை மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் 2022 இன் படி இணையவழி சூதாட்டம் மற்றும் இணைய வழி வாய்ப்பு விளையாட்டு பந்தயம் போன்றவற்றில் விளையாடுவதை தடை செய்துள்ளது. அவ்வாறு இணையவழி சூதாட்டங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மூன்று மாதம் சிறை தண்டனையும் அல்லது 5000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பண அல்லது பிற வழிகளில் தூண்டினால், விளம்பரத்தில் இருக்கும் நபர்களுக்கு அல்லது நிறுவனத்திற்கு ஒரு ஆண்டு வரை சிறை தண்டனையோ அல்லது 5 லட்சம் வரை அபராதாமோ அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu