மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை பயணம்

June 20, 2024

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இலங்கை சென்றுள்ளார். அங்கு, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தனா ஆகியோரை ஜெய்சங்கர் சந்திக்க உள்ளார். இருநாட்டு உறவு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை சார்ந்த இரு தரப்பு நடவடிக்கைகள் குறித்து, இந்த சந்திப்பின்போது அவர் கலந்துரையாட உள்ளதாக கூறப்படுகிறது. இன்று கொழும்பு விமான நிலையத்தில் சென்று இறங்கிய அமைச்சர் ஜெய்சங்கரை இலங்கை அமைச்சர் தாரக பாலசூரியா மற்றும் ஆளுநர் எஸ் தொண்டைமான் ஆகியோர் வரவேற்றனர். […]

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இலங்கை சென்றுள்ளார். அங்கு, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தனா ஆகியோரை ஜெய்சங்கர் சந்திக்க உள்ளார். இருநாட்டு உறவு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை சார்ந்த இரு தரப்பு நடவடிக்கைகள் குறித்து, இந்த சந்திப்பின்போது அவர் கலந்துரையாட உள்ளதாக கூறப்படுகிறது.

இன்று கொழும்பு விமான நிலையத்தில் சென்று இறங்கிய அமைச்சர் ஜெய்சங்கரை இலங்கை அமைச்சர் தாரக பாலசூரியா மற்றும் ஆளுநர் எஸ் தொண்டைமான் ஆகியோர் வரவேற்றனர். மேலும், ஜெய்சங்கரின் இலங்கை பயணத்தில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி உடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu