ஹரியானாவில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடந்த யாத்திரையின் போது இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வன்முறை கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் அங்கு ஜலாபிசேக யாத்திரை நடைபெற உள்ளது.
ஹரியானாவில் நூ மாவட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஜல அபிஷேக யாத்திரை நடந்து வந்தது. இதில் இரண்டு கும்பல்கள் யாத்திரையில் பங்கேற்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும் அங்கு பல நாட்களுக்கு பின்பு வன்முறை கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் சர்வ இந்து சமாஜ் என்ற பெயரில் மகாபஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. இதில் 28ஆம் தேதி முதல் ஜனாபிஷேக யாத்திரையை மீண்டும் அரசு அனுமதி உடன் அல்லது அனுமதி இல்லாமல் தொடங்க முடிவு செய்து இருக்கின்றனர்.