ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் விஞ்ஞானிகள் புளூட்டோவின் மிகப்பெரிய நிலவான சாரோனில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகியவற்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு, நமது சூரிய குடும்பத்தின் விளிம்பில் உள்ள விண்பொருட்களைப் பற்றிய நமது புரிதலை மாற்றும் வகையில் உள்ளது.
சாரோனின் உட்புறத்தில் இருந்து வெளிப்பட்டு, மேற்பரப்பில் பள்ளங்கள் ஏற்பட்ட இடங்களில் கரியமில வாயு காணப்படுகிறது. இது சந்திரனின் உட்புற கட்டமைப்பு பற்றிய புதிய தகவல்களை வழங்குகிறது. சூரிய கதிர்வீச்சுடன் சாரோனின் மேற்பரப்பு தொடர்பு கொள்ளும் போது ஹைட்ரஜன் பெராக்சைடு உருவாகிறது. இது சந்திரனின் மேற்பரப்பு தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. மேலும், சாரோனில் உள்ள இந்த பொருட்கள், சூரிய குடும்பம் உருவான போது நிலைமைகள் எப்படி இருந்திருக்கும் என்பதைப் பற்றிய குறிப்புகளை வழங்குவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சாரோனில் காணப்படும் இந்த பொருட்கள், நெப்டியூன் மற்றும் யுரேனஸ் போன்றவற்றிலும் இருக்கலாம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். மேலும், சூரிய குடும்பத்தின் வெளிப்புறத்தில் உயிர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்தி உள்ளதாக கூறுகின்றனர்.