ஜப்பான் நாடு, இந்தியா மற்றும் இதர தெற்காசிய நாடுகளில் இருந்து திறன் வாய்ந்த பணியாளர்களை வரவேற்க தயாராக உள்ளது. வரும் 2030 ஆம் ஆண்டுக்குள், ஜப்பானின் நேரடி அன்னிய முதலீட்டு மதிப்பை 100 ட்ரில்லியன் யென் அளவுக்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டும் நடவடிக்கையாக, தெற்காசிய பணியாளர்களை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, ஜப்பான் நாட்டு விசா நடைமுறைகளில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன.
தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்கள், ஜப்பானில் பணி செய்வதற்கு ஏதுவாக விசா நடைமுறைகள் எளிமை படுத்தப்படுகின்றன. குறிப்பாக, 5 ஆண்டுகளுக்கு ஜப்பானில் தங்கி இருந்து பணி செய்வதற்கான விசா கொண்டுவரப்படுகிறது. அதன்படி, விவசாயம், சுகாதாரத்துறை, கட்டுமானத்துறை மற்றும் உற்பத்தி துறையில் பணி செய்வோருக்கு விசா வழங்கப்படுகிறது. மேலும், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஜப்பானில் தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள் எளிமையாக வழங்கப்படுகின்றன.