பிரபல ஜப்பான் நிறுவனமான மிட்சுபிஷி நிறுவனம் அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்த விமானம் புவி வெப்பமயமாதல், பசுமை புரட்சி போன்றவற்றை கணக்கில் கொண்டு உருவாக்கப்பட உள்ளது. மேலும் கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் தயாரிப்புக்கு ஜப்பான் தொழில் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தயாரிப்பு 2035 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இத்திட்டத்திற்கு 27 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் எரிபொருள் எரியும் போது கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவதில்லை. 2050 க்குள் கார்பன் நடுநிலைமையை இலக்காகக் கொண்ட ஜப்பானுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பாக உள்ளது.