விண்வெளி துறையில் புரட்சிகரமான திட்டம் ஒன்றை Obayashi Corporation என்ற ஜப்பான் நிறுவனம் முன்மொழிந்துள்ளது. ஸ்பேஸ் எலிவேட்டர் என்று அழைக்கப்படும் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் செவ்வாய் கிரகத்திற்கு 3 முதல் 4 மாதத்துக்குள் சென்றடைய முடியும்.
கோட்பாட்டு அளவில் புதுமையான திட்டம் ஒன்றை ஜப்பான் நிறுவனம் முன்மொழிந்துள்ளது. ஸ்பேஸ் எலிவேட்டர் திட்டத்தில் பூமியின் மேற்பரப்பில் கேபிள் பொருத்தப்பட்டு, செயற்கைக்கோள் ஒன்றில் இணைக்கப்படும். கடந்த 1895 ஆம் ஆண்டு இந்த புதுமையான கோட்பாடு முதன் முதலில் சொல்லப்பட்டது. விண்வெளிக்கு செயற்கைக்கோள் போன்ற பொருட்களை நேரடியாக கொண்டு செல்வதற்கு இந்த திட்டம் சொல்லப்பட்டது. தற்போது, Obayashi Corporation நிறுவனம் இதை எதிர்காலத்துக்கான திட்டமாக அறிவித்துள்ளது.