அமெரிக்க பொருளாதார சூழல் வலுவயென் டைந்துள்ளதால், டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளது. எனவே, இன்றைய வர்த்தக நாளில், ஜப்பானிய நாணயமான யென், 34 வருட குறைவான மதிப்பை பதிவு செய்துள்ளது.
இன்றைய ஆசிய அமர்வில், ஜப்பானிய யென் 151.97 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. அதாவது, அமெரிக்காவின் ஒரு டாலர் ஜப்பானின் 151.97 யென் களுக்கு சமம். இது கடந்த 2022 அக்டோபரை விட 0.2% குறைவாகும். அத்துடன், 1990 களுக்குப் பிறகு பதிவாகும் மிகக் குறைந்த மதிப்பாகும். டாலருக்கு நிகரான யென் மதிப்பு வேகமாக குறைய தொடங்கினாலும், ஜப்பான் தனது நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்காது என அந்நாட்டின் நிதி அமைச்சர் சுனிச்சி சுசுகி தெரிவித்துள்ளார்.