சரிவிலிருந்து மீண்டெழுந்த ஜப்பான் பங்குச் சந்தை

August 16, 2024

ஜப்பானின் நிக்கெய் பங்குச் சந்தை இன்று வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட 3% உயர்ந்து, கடந்த நான்கு ஆண்டுகளில் சிறந்த வாரத்தை பதிவு செய்தது. நிக்கெய் இண்டெக்ஸ் 3.6% உயர்ந்து 38,062.67 புள்ளிகளாகவும், டோபிக்ஸ் இண்டெக்ஸ் 3% உயர்ந்து 2,678.60 புள்ளிகளாகவும் முடிந்தது. இந்த வாரம் மட்டும் நிக்கெய் இண்டெக்ஸ் 8% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியில் இருந்து மீண்டெழுந்துள்ளது. அமெரிக்காவின் சில்லறை விற்பனை வளர்ச்சி, யென் மதிப்பில் ஏற்பட்ட தற்காலிக வீழ்ச்சி மற்றும் ஜப்பான் […]

ஜப்பானின் நிக்கெய் பங்குச் சந்தை இன்று வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட 3% உயர்ந்து, கடந்த நான்கு ஆண்டுகளில் சிறந்த வாரத்தை பதிவு செய்தது. நிக்கெய் இண்டெக்ஸ் 3.6% உயர்ந்து 38,062.67 புள்ளிகளாகவும், டோபிக்ஸ் இண்டெக்ஸ் 3% உயர்ந்து 2,678.60 புள்ளிகளாகவும் முடிந்தது. இந்த வாரம் மட்டும் நிக்கெய் இண்டெக்ஸ் 8% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியில் இருந்து மீண்டெழுந்துள்ளது.

அமெரிக்காவின் சில்லறை விற்பனை வளர்ச்சி, யென் மதிப்பில் ஏற்பட்ட தற்காலிக வீழ்ச்சி மற்றும் ஜப்பான் பொருளாதார வளர்ச்சி ஆகியவை இந்த உயர்வுக்கு முக்கிய காரணங்கள் என்று சொல்லப்படுகிறது. ஃபாஸ்ட் ரீட்டெய்லிங் 6.2%, டோக்கியோ எலக்ட்ரான் 4.8%, அட்வான்டெஸ்ட் 6.8% என முக்கிய பங்குகள் சிறப்பாக செயல்பட்டன. இருப்பினும், கடந்த ஜூலை மாதத்தில் பதிவான 42,426.77 புள்ளிகளை விட இன்னும் குறைவாகவே உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu