உலகின் முன்னணி சிப் மேக்கர் என்விடியா, ஓபன் ஏஐ நிறுவனத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் நிதி திரட்டும் நடவடிக்கையின் பகுதியாக நிகழும் பேச்சுவார்த்தையில் இணைய உள்ளது.
ஏற்கனவே, ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் ஓபன் ஏஐ நிறுவனத்தில் முதலீடு செய்வது மற்றும் பங்கு பிரிப்பு ஆகியவற்றை ஆராய்ந்து வருகின்றன. ஓபன் ஏஐ நிறுவனத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே 13 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், என்விடியா சுமார் 100 மில்லியன் டாலர்கள் பங்களிப்பு செய்யலாம் என கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் நிறைவேறும் பட்சத்தில், உலகின் முன்னணி 3 தொழில்நுட்ப நிறுவனங்கள் ஓபன் ஏஐ நிறுவனத்தை ஆதரிக்கும் வகையில் செயல்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது உலக அளவில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வரும். இந்த நிதி திரட்டல் செயல்பாடுகளை, த்ரைவ் கேப்பிட்டல் நிறுவனம், 1 பில்லியன் டாலர் முதலீட்டில் வழி நடத்துவதாக கூறப்படுகிறது.