ஜெருசலம் வெடிகுண்டு தாக்குதல்கள்: ஒருவர் பலி; 14 பேர் காயம்

November 23, 2022

ஜெருசலேம் நகரில் அடுத்தடுத்து இன்று காலை 2 முறை வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்து உள்ளன. மேற்கு ஜெருசலேம் நகரின் கிவாத் ஷால் பகுதியில், பேருந்து நிறுத்தம் ஒன்றின் நுழைவு வாயிலில் காலை 7 மணியளவில் முதல் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதனை தொடர்ந்து ரமோத் ஜங்சனில், நகரின் நுழைவு வாயில் பகுதியில் 2-வது வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் பற்றி தெரியவில்லை. இந்த தாக்குதல்களுக்கு எந்தவொரு குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்த முதல் […]

ஜெருசலேம் நகரில் அடுத்தடுத்து இன்று காலை 2 முறை வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்து உள்ளன.

மேற்கு ஜெருசலேம் நகரின் கிவாத் ஷால் பகுதியில், பேருந்து நிறுத்தம் ஒன்றின் நுழைவு வாயிலில் காலை 7 மணியளவில் முதல் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதனை தொடர்ந்து ரமோத் ஜங்சனில், நகரின் நுழைவு வாயில் பகுதியில் 2-வது வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் பற்றி தெரியவில்லை.

இந்த தாக்குதல்களுக்கு எந்தவொரு குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்த முதல் தாக்குதலில் ஒருவர் பலியானார். 11 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மவுண்ட் ஸ்கோபஸ் மருத்துவ மையத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர். 2-வது தாக்குதலில் 3 பேர் காயமடைந்து உள்ளனர். இதில், ஆணிகளை பயன்படுத்தி வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. அவர்கள் ஹடாஸ்சா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதன்படி, ஜெருசலேமில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதல்களில் ஒருவர் பலி மற்றும் 14 பேர் காயமடைந்து உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu