ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் கைது- அமலாக்கத்துறை அதிரடி

September 2, 2023

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல். இவர் ரூ.538 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 2019 ஆம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தன் செயல்பாடுகளை நிறுத்தியது. இதை தொடர்ந்து விமான நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் பதவி விலகினார். 25 ஆண்டுகளாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பயணித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த மே 5-ம் தேதி ரமேஷ் கோயலின் வீடு அலுவலகம் உட்பட்ட ஏழு இடங்களில் […]

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல். இவர் ரூ.538 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 2019 ஆம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தன் செயல்பாடுகளை நிறுத்தியது. இதை தொடர்ந்து விமான நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் பதவி விலகினார். 25 ஆண்டுகளாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பயணித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த மே 5-ம் தேதி ரமேஷ் கோயலின் வீடு அலுவலகம் உட்பட்ட ஏழு இடங்களில் திடீர் சோதனை சிபிஐ அதிகாரிகளால் நடத்தப்பட்டது. இதில் சிபிஐ பதிவு செய்த எஃப்.ஐ.ஆர் வழக்கின் அடிப்படையில் இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் நரேஷ் கோயில் கனரா வங்கியில் ரூபாய் 538 கோடி மோசடி செய்த வழக்கில் நேற்று அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுக்கு முன்னதாக மத்திய புலனாய்வு முகமை அனுப்பிய இரண்டு சமன்களை அவர் ஏற்று ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu