ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 100 கோடி முதலீடு - ஜலன் கல்ரோக் கன்சார்டியம்

September 1, 2023

தற்போது செயல்பாட்டை நிறுத்தி உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் புதிய விளம்பரதாரராக ஜலன் கல்ரோக் கன்சார்டியம் உள்ளது. இந்த அமைப்பு, ஜெட் ஏர்வேஸில் 100 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. திவால் நிலையில் இருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஏலத்தில் வாங்கிய முக்கிய அமைப்பாக ஜலன் கல்ரோக் கன்சார்டியம் உள்ளது. இது, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, இதுவரை 250 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. மேலும், செப்டம்பர் 30ம் […]

தற்போது செயல்பாட்டை நிறுத்தி உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் புதிய விளம்பரதாரராக ஜலன் கல்ரோக் கன்சார்டியம் உள்ளது. இந்த அமைப்பு, ஜெட் ஏர்வேஸில் 100 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

திவால் நிலையில் இருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஏலத்தில் வாங்கிய முக்கிய அமைப்பாக ஜலன் கல்ரோக் கன்சார்டியம் உள்ளது. இது, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, இதுவரை 250 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. மேலும், செப்டம்பர் 30ம் தேதிக்குள், மீதமுள்ள 100 கோடி ரூபாயையும் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. எனவே, விரைவில் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தனது செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu