ஜார்கண்ட் மந்திரி பண மோசடி வழக்கில் கைது

பண மோசடி வழக்கில் ஜார்கண்ட் மாநிலத்தில் மந்திரி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் சம்பா சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியை சேர்ந்த ஆலிம்கீர் ஆலம் ஊரக மேம்பாட்டு துறை மந்திரியாக உள்ளார். இந்த நிலையில் ஆலம்கீர் ஆலமின் தனிச்செயலாளர் சஞ்சீவ் லால் மற்றும் அவருடைய வீட்டு உதவியாளர்கள் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் 37 கோடி ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் […]

பண மோசடி வழக்கில் ஜார்கண்ட் மாநிலத்தில் மந்திரி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் சம்பா சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியை சேர்ந்த ஆலிம்கீர் ஆலம் ஊரக மேம்பாட்டு துறை மந்திரியாக உள்ளார். இந்த நிலையில் ஆலம்கீர் ஆலமின் தனிச்செயலாளர் சஞ்சீவ் லால் மற்றும் அவருடைய வீட்டு உதவியாளர்கள் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் 37 கோடி ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் அமலாகத்துறை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆலம்கீர் ஆலம் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது. சுமார் இரண்டு நாட்கள் மேற்கொண்ட விசாரணையில் அமலாக்கத்துறை ஆலம்கீர் ஆலமை கைது செய்துள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu