செப்டம்பர் 19 ல், ஜியோ ஏர் பைபர் தொடக்கம் - ரிலையன்ஸ் வருடாந்திர சந்திப்பில் அறிவிப்பு

August 28, 2023

இன்று நடைபெற்ற ரிலையன்ஸ் குழுமத்தின் 46 வது வருடாந்திர சந்திப்பில், ஜியோ ஏர் பைபர் தொடக்கம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 19ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தி நாளை முன்னிட்டு, ஜியோ ஏர் பைபர் சேவைகள் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் வர்த்தக குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நிகழ்வில் பேசிய அவர், கொரோனா காலத்திலும், ஜியோ பைபர் முக்கிய உயர்வை எட்டியுள்ளதாக கூறினார். ஜியோ பைபர் வாடிக்கையாளர் எண்ணிக்கை 10 […]

இன்று நடைபெற்ற ரிலையன்ஸ் குழுமத்தின் 46 வது வருடாந்திர சந்திப்பில், ஜியோ ஏர் பைபர் தொடக்கம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 19ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தி நாளை முன்னிட்டு, ஜியோ ஏர் பைபர் சேவைகள் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் வர்த்தக குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நிகழ்வில் பேசிய அவர், கொரோனா காலத்திலும், ஜியோ பைபர் முக்கிய உயர்வை எட்டியுள்ளதாக கூறினார். ஜியோ பைபர் வாடிக்கையாளர் எண்ணிக்கை 10 மில்லியனை தாண்டி உள்ளதாகவும், சராசரியாக, ஒரு வாடிக்கையாளர், ஒரு மாதத்திற்கு, 280 ஜிபி இணைய சேவையை பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார். எனவே, ஜியோ ஏர் பைபர் வருகை மூலம், ஜியோ சேவையில் 10 மடங்கு உயர்வை எதிர்நோக்குவதாக கூறியுள்ளார். அத்துடன், 20% சலுகை விலையில் ஜியோ ஏர் பைபர் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார். ஜியோ ஏர் பைபர் மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu