ஜியோ ஏர் பைபர் இன்று முதல் வெளியீடு

September 19, 2023

விநாயகர் சதுர்த்தி நாள் அன்று ஜியோ ஏர் பைபர் வெளியிடப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று முதல் ஜியோ ஏர் பைபர் வெளியிடப்படுகிறது. முன்னதாக, சில தினங்களுக்கு முன்னால், ஏர்டெல் நிறுவனத்தின் அதிவேக இணைய சேவை அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, அதற்கு போட்டியாக, ஜியோ நிறுவனத்தின் ஏர் பைபர் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 599 ரூபாய் கட்டணத்தில் ஏர் பைபர் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 1499 ரூபாய் கட்டணம் சொல்லப்பட்டுள்ளது. நேரடியாக […]

விநாயகர் சதுர்த்தி நாள் அன்று ஜியோ ஏர் பைபர் வெளியிடப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று முதல் ஜியோ ஏர் பைபர் வெளியிடப்படுகிறது.
முன்னதாக, சில தினங்களுக்கு முன்னால், ஏர்டெல் நிறுவனத்தின் அதிவேக இணைய சேவை அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, அதற்கு போட்டியாக, ஜியோ நிறுவனத்தின் ஏர் பைபர் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 599 ரூபாய் கட்டணத்தில் ஏர் பைபர் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 1499 ரூபாய் கட்டணம் சொல்லப்பட்டுள்ளது. நேரடியாக வயர் மூலம் இணைப்பு கொண்டு சேர்க்க முடியாத பகுதிகளிலும், ஜியோ ஏர் பைபர் இணைய சேவையை வழங்கும் என ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ஜியோ ஏர் பைபர் அதிவேக இணைய சேவையை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், 6000860008 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் அல்லது வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், ஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மற்றும் நேரடி விற்பனையகங்களில் ஏர் பைபர் சேவையைப் பெற விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu