அறிமுக நாளில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் 5% சரிவு

August 21, 2023

ரிலையன்ஸ் குடும்பத்தை சேர்ந்த ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், இன்று முதல் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுகிறது. அறிமுக நாளான இன்று, அதன் மதிப்பு 5% சரிந்து, அதன் லோயர் சர்க்யூட் அளவை தொட்டுள்ளது. முதல்முறையாக இன்று பங்குச் சந்தையில் அறிமுகமான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள், மும்பை பங்குச் சந்தையில் 265 ரூபாய்க்கும், தேசிய பங்கு சந்தையில் 262 ரூபாய்க்கும் வெளியானது. ஆனால், வெளியான சில நிமிடங்களிலேயே 5% சரிவை பதிவு செய்து, அதன் லோயர் சர்க்யூட் […]

ரிலையன்ஸ் குடும்பத்தை சேர்ந்த ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், இன்று முதல் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுகிறது. அறிமுக நாளான இன்று, அதன் மதிப்பு 5% சரிந்து, அதன் லோயர் சர்க்யூட் அளவை தொட்டுள்ளது.

முதல்முறையாக இன்று பங்குச் சந்தையில் அறிமுகமான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள், மும்பை பங்குச் சந்தையில் 265 ரூபாய்க்கும், தேசிய பங்கு சந்தையில் 262 ரூபாய்க்கும் வெளியானது. ஆனால், வெளியான சில நிமிடங்களிலேயே 5% சரிவை பதிவு செய்து, அதன் லோயர் சர்க்யூட் அளவை எட்டியது. அத்துடன், தொடர்ந்து 10 நாட்களுக்கு இது டிரேட் ஃபார் டிரேட் பிரிவில் வர்த்தகம் செய்யப்பட உள்ளது. எனவே, பங்கு மதிப்பில் பெரிய அளவிலான மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், நிறுவனத்தின் வர்த்தகப் போக்கை கணக்கிட, முதலீட்டாளர்கள் சற்று காத்திருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu