ககன்யான் குறித்த முக்கிய அறிவிப்பு - அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியீடு

சந்திரயான் திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, இஸ்ரோவின் அடுத்த திட்டமான ககன்யான் குறித்த முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, வரும் அக்டோபர் மாதத்தில், ககன்யான் திட்டத்தின் சோதனை முயற்சிகள் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில், மனிதர்கள் விண்வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, 3 நாட்கள் சுற்றுவட்ட பாதையில் இருக்க உள்ளனர். மூன்று பேரை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுவட்ட பாதை பயணம் […]

சந்திரயான் திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, இஸ்ரோவின் அடுத்த திட்டமான ககன்யான் குறித்த முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, வரும் அக்டோபர் மாதத்தில், ககன்யான் திட்டத்தின் சோதனை முயற்சிகள் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில், மனிதர்கள் விண்வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, 3 நாட்கள் சுற்றுவட்ட பாதையில் இருக்க உள்ளனர். மூன்று பேரை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுவட்ட பாதை பயணம் நிறைவடைந்த பின்னர், அவர்கள் பாதுகாப்பாக பூமியில் தரையிறக்கப்படுவர். இந்நிலையில், ககன்யான் திட்டத்தின் இரண்டாம் பாகத்தில், ரோபோ ஒன்றை விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாக, அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். “வியோமித்ரா என பெயரிடப்பட்டுள்ள பெண்பால் ரோபோ, விண்ணுக்கு அனுப்பப்படவுள்ளது. மனிதர்களை நேரடியாக விண்வெளிக்கு அனுப்பும் முன்னர், விண்வெளியில் மனிதர்கள் ஈடுபட உள்ள செயல்களில், இந்த ரோபோ, சோதனை அடிப்படையில் ஈடுபடுத்தப்பட உள்ளது. இது மனிதர்களின் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை உறுதி செய்வதாக அமையும்” என தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu