வயநாடு நிலச்சரிவில் உயரிழந்த குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடென் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 300க்கும் மேற்பட்டோர் பலியாகியனர். சுமார் 3,000 மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நான்காவது நாட்களாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வயநாடு நிலச்சரிவில் உயரிழந்த குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடென் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு என்னுடைய பிரார்த்தனைகள் சென்றடையட்டும். மீட்பு பணிகளில் ஈடுபடும் வீரர்களின் தைரியத்தை பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.