அமெரிக்காவில் உள்ள 2 இந்திய வம்சாவளி விஞ்ஞானிகளுக்கு ஜோ பைடன் விருது

October 26, 2023

அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 விஞ்ஞானிகளுக்கு ஜோ பைடன் அந்நாட்டின் உயரிய விருதை வழங்கி உள்ளார். அமெரிக்காவின் தேசிய அறிவியல் விருதுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேரடியாக விஞ்ஞானிகளுக்கு இந்த விருதை வழங்கி கௌரவித்தார். இதில், அறிவியல் தொழில்நுட்பத் துறையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் காட்கில், தனது கண்டுபிடிப்புகளுக்காக விருது பெற்றுள்ளார். குறிப்பாக, பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொழில்நுட்பம், மின்சார விளக்குகள், எரிவாயு சிக்கன அடுப்பு போன்ற மலிவு விலை […]

அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 விஞ்ஞானிகளுக்கு ஜோ பைடன் அந்நாட்டின் உயரிய விருதை வழங்கி உள்ளார்.
அமெரிக்காவின் தேசிய அறிவியல் விருதுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேரடியாக விஞ்ஞானிகளுக்கு இந்த விருதை வழங்கி கௌரவித்தார். இதில், அறிவியல் தொழில்நுட்பத் துறையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் காட்கில், தனது கண்டுபிடிப்புகளுக்காக விருது பெற்றுள்ளார். குறிப்பாக, பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொழில்நுட்பம், மின்சார விளக்குகள், எரிவாயு சிக்கன அடுப்பு போன்ற மலிவு விலை கண்டுபிடிப்புகளுக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுப்ரா சுரேஷ் என்ற மற்றொரு விஞ்ஞானிக்கு, உடற்கூறு அறிவியல் மற்றும் வாழ்க்கை அறிவியல் போன்ற துறைகளில் முன்மாதிரி ஆராய்ச்சிகளை மேற்கொண்டதற்காக தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu